Our Vision
Promoting children’s Physical, Mental, Emotional, Professional, Social and Spiritual skills enabling them to be successful citizens.
Our Mission
To enhance opportunities for children’s life-long learning by facilitating schools in our zone with pedagogical and physical aspects enabling them to meet life’s situations in the changing world.
பௌர்ணமி விழா
துணுக்காய் வலய பௌர்ணமி விழா - 2012
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரனையுடன் துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட பௌர்ணமி விழா நிகழ்வு இன்று வைகாசி மாதம் 05ம் திகதி சனிக்கிழமை மு/ பாலிநகர் மகா வித்தியாலய அரங்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கான விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடனும், கோலாட்டம், காவடியாட்டம், செம்பு நடனம் போன்ற கிராமிய நடனங்களுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. L. மாலினி வெனிற்றன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வட மாகாண கல்விச் செயளாளர் திரு S. சத்தியசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந் நிகழ்வில் மாகாண கல்வித்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், வடமாகாணவலயக் கல்விப்பணிப்பாளர்கள்,
துணுக்காய்வலயக் கல்விப்பணிமனை உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள், ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்விற்கான மதிப்பீட்டு உரையினை வடமாகாண அழகியற் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் நிகழ்த்தினார். வலயக்கீதத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.









பரிசளிப்பு விழா நிகழ்வு.
ஆரம்பக் கல்வி ஆசிரியருக்கான செயலமர்வுஆரம்பக் கல்வி ஆசிரியருக்கான செயலமர்வு
விளையாட்டு நிகழ்வுவிசேட கல்வி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு
|











